அறம் நனி சிறக்க
ஆனந்தம் பிறக்கும்
இன்பம் விளை வான்
ஈரம் பொழி வான்
வாய்மை அணிமலர்
வாழ்க்கை மணிமலர்
தண் புனல் ஆகும்
உண் பிணி ஓடும்
துன்புறு துயரம்
இன்புற இசைக்கும்
பண்புறு வார்த்தை
படி உயர் கீர்த்தி
தண் கடல் பெருகின்
மண் திடல் பருகும்
குற்றம் துறக்கப்
பெற்றோம் சிறப்போம்
முயல் முயலாமை
செயல் புரி ஆமை
மாலை வந்திடல் காண்
காலை வந்து இடும் காண்
மென்புலன் அன்பு
இன்புறு பண்பு
நல்லன ஆயின
தொல்லைகள் போயின
நுண் மணல் எண்ணீர்
தண் புனல் உண்நீர் |
உண்ணீர் தண்ணீர்
பண்நீர் பண்ணீர்
மாரி வாய்க்கச் செய்
காரியம் வாய்க்கும்
மனை நடு தென்னை
உனக்கிடும் பின்னை
பஞ்சி அறியான்
துஞ்சி அறியான்
மாரி மலரின்
சீரும் குறையும்
ஒண் தொடி படவார்
கண் படின் அடியார்
நோய்க்கு மருந்திவள்
வாய்க் கின் விருந்திவள்
பூப்பாய் விரிப்பாய்
காப்பாய் இருப்பாய்
பொருந்து மலர் கள்
பிரிந்தால் அலர் கள்
வளை நெகிழ நண்டூரும்
வளை நெகிழப் பெண்சோரும்
நெடுஞ்சுவர் இடுஞ்செயல்
இடும் பை அறிகுறி
விளைவயல் சீரால்
களைகளும் அழியும்
ஆண்மை வழி வழிக்
கேண்மை தெளி தெளி |