பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்.
 
முறுகல் .
சொற்பதம்
.
.
இருபடி
குவளை நாறத்
தவளை கூப்பிடும்

பூக் கள் மயக்கும்
பாக் கள் பயக்கும்

கடன் படு சோற்றினும்
கஞ்சி இனிது

கோவணம் போர்க்க உதவாது
ஆவணம் சேர்க்க உதவாது

சூட்டிலை மாடு
வீட்டுக்குக் கேடு

நீர் படர் நெறியில்
பார் படர் அறிவை

படியாப் பாவை
விடியா/ முடியா விளக்கு

தேர் மணிக் குரலால்
நேர் துயர் தணியும்

தவறிலர் ஆயினும்
தவறணை இடமே

உள்ளம் கையில்
உண்மை துலங்கும்

மனங்கொளாப் பிரியம்
தனங் கொளாப் புரியும்

புது நிழல் இருந்தவன்
பழநிழல் தரியான்

தர்மச் சோற்றைத்
தின்றவன் தவிப்பான்

சுடர்விளங் கொளிச் சொல்
படர்ந்தன கவினே

வண்டுபடு நறும்பொழில்
உண்டது மறவார்

நாடு படுபோர்
காடு படு தீ / வேர்

பருவம் செய்வன
பண் பின் வழித்தே

நீர் தரு விருந்தின்
சீர் பெருந் தகைத்தே

வாய்மொழி நோய்தணி
தாய்மையர் உளரே

பகைதணி பண்பால்
முகைவிடும் அன்பு

பெய்பனி நலியினும்
உய்பவர் சோரார்

மானம் துறந்தவன்
ஞானம் பிறந்தவன்

தீண்டத் தகாதன
வேண்டத் தகாதன

தப்புக்குள் சோரம்
உப்புக்குள் ஈரம்

நல்லவை வளரும்
அல்லவை அழியும்

பூவிலை வாசம்
வண்டுக்கு நேசம்

காமத்தைத் துறந்தோன்
நாமத்தாற் சிறந்தோன்

வழிபடு சிந்தனை
மொழிபடு வந்தனை

தெரு நாயொடு சருவாதே
பெரியோ ரொடு பகையாதே

சிறு நல் நட்புப்
பெறுமதி பெரிது

நேர்கோடுகள் ஓவியம் ஆகா
சீர்கேடுகள் காவியம் ஆஹா!

******** ******** *******

  <--முதல் பக்கம்    
முற்றும்
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்
Design & Developed By: Dream Solutions (Pvt) Ltd.